குழந்தைகளோடு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட திருச்சி தம்பதி!

குழந்தைகளோடு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட திருச்சி தம்பதி!

எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என அரசு, தன்னார்வ அமைப்புகள், ஊடகங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருந்தாலும், தற்கொலைகள் நின்றபாடில்லை.குடும்பத் தலைவர்களின் செயல்களால் ஏற்பட்ட பிரச்சனைக்குப் பிஞ்சுகள் பலியாகியிருக்கின்றன.திருச்சி மாவட்டம், உறையூரைச் சேர்ந்த உத்தராபதி, அவரது மனைவி சங்கீதா, 18 வயதான மகள் அபினயஶ்ரீ, 13 வயதான மகன் ஆகாஷ் ஆகியோர் திண்டுக்கல் கொடைரோடு அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

திருச்சி உறையூர் மருந்து கம்பெனி அதிபர் உத்தரபூபதி, தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு ஸ்டேஷனில் குடும்பத்தினருடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.நேற்று முன்தினம் இரவு கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரம் அருகே சிலரது உடல் சிதறிக் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் அங்கு சென்றனர். நான்கு பேரின் உடல்கள் சிதறிக் கிடந்தன. அருகில் கிடந்த பைகளை சோதனையிட்டதில், ஒரு டைரி, ஆதார் அட்டைகள் கிடந்தன. சிதறிக் கிடந்தவரின் சட்டைப்பையில் ரயில், பஸ் டிக்கெட்டுகள் இருந்தன.போலீசார் கூறியது: திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்தவர் உத்தரபூபதி 50. நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மருந்து மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

Advertisement

தொழில் நஷ்டத்தால் உத்தரபூபதி மனமுடைந்தார். டிச. 11ல் குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றார். டிச.12ல் கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். இரவு 11:20 மணிக்கு 3வது பிளாட்பாரம் தண்டவாளத்தில் குடும்பத்தினருடன் நடந்து சென்றார். சென்னை நோக்கிச் சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் மோதியதில் இறந்தனர்.ரயில் டிரைவர் ஒலி எழுப்பியும், நான்கு பேரும் கைகோர்த்தபடி சேர்ந்து நின்று தற்கொலை செய்துள்ளனர். தொழில் நஷ்டமே இதற்கு காரணம் என, முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது’ என்றனர்.