VDART நிறுவனத்தின் சார்பில் திருச்சி காவல்துறைக்கு 1500 சானிடைசர்கள்!!
கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே வருகின்றனர். பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிந்து செல்லுதல், கைகளை சுத்தம் செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கையாளுதல் மிகவும் அவசியமாகும்.
திருச்சி VDart நிறுவனம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்து கொண்டே வருகின்றன. திருச்சியிலிருந்து திண்டுக்கல் மாவட்ட மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதும், கொரோனா காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்ததும் என திருச்சியில் ஒரு முன்னுதாரண நிறுவனமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் சார்பில் இன்று திருச்சி மாநகர காவல் துறையினருக்கு 1500 சானிடைசர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதனிடம் வழங்கினர். VDart நிறுவனத்தின் CSR செயல்பாடுகளின் கீழ் பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர்.ஏற்கனவே திருச்சி மாநகர காவல் துறையினருக்கு 4,500 முகக் கவசங்கள் வழங்கியுள்ளனர் அதனைத் தொடர்ந்து இன்று சானிடைசர்கள் வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் VDart நிறுவனத்தின் மேலாளர் V.சங்கரநாராயணன், VDart நிறுவனத்தின் CSR பிரிவு தலைவர் மனோஜ் தர்மர் ஆகியோர் நேரில் வழங்கினர். தொடர்ந்து இந்த கொரோனா காலகட்டத்தில் சமூக பணியினை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.