97 கிலோ குட்கா பறிமுதல் - ராஜஸ்தானை சேர்ந்த 2 நபர் கைது

97 கிலோ குட்கா பறிமுதல் - ராஜஸ்தானை சேர்ந்த 2 நபர் கைது

பொது மக்களிடம் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்குமார் ஒத்துழைப்போடு திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு அவர்கள் தலைமையில், காவல்துறையும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் இணைந்து

ராஜஸ்தானை சேர்ந்த ஜிஜேந்திரகுமார் மற்றும் ஞானசேகர் மற்றும் ஜெயச்சந்திரன் என்பவரிடம் இருந்து 97 கிலோ கிராம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டு ஒரு சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு மூன்று நபர்கள் மற்றும் இரு வாகனத்தையும் மார்க்கெட் காவல் நிலையத்தில் மேல்நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, மகாதேவன், வடிவேல், பொன்ராஜ், அன்புச்செல்வன், சண்முகசுந்தரம் உடன் இருந்தனர். மேலும் பொதுமக்களும் இதுபோன்று தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தாங்கள் அருகாமையில் உள்ள கடைகளிலோ அல்லது வீடுகளிலோ பதுக்கி வைக்கப்பட்டு இருந்தால் 9944959595, 9444042322 இந்த எண்களுக்கு தகவல் கொடுக்கலாம்.

தகவல் கொடுப்பவரின் விபரம் ரகசியம் காக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision