சிறுவனுக்கு மது குடிக்க வைத்து வீடியோ பதிவு செய்து முகநூலில் பதிவிட்ட நபர் கைது.
தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு மதுவை கட்டாயமாகக் கொடுத்து, அதை சிறுவர்கள் குடிப்பதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து புதூர் உத்தமானுரை சேர்ந்தவர் அஜித் ஆட்டோ மற்றும் மினி லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அஜித் என்பவர் அவரது சகோதரர் அண்ணன் மகனான சிறுவன் முன்பு மது பாட்டிலை கீழே வைத்து மது அருந்துவது போன்ற வீடியோவை பதிவு செய்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த சிறுவன் மதுவை அருந்திவிட்டு இறைச்சியை ஒருவர் எடுத்துக் கொடுக்க அந்த சிறுவன் சாப்பிடுகிறான். மேலும் அந்தச் சிறுவன் மது அருந்தும் போது மது பாட்டில் அருகிலேயே பீர் பாட்டிலையும் ஒருவர் வைக்கிறார்.
அந்த சிறுவன் மது குடிப்பது போன்ற வீடியோ எடுத்து அந்த வீடியோவில் மை அண்ணன் மகன் என பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். சிறுவர்கள் மது அருந்தக்கூடாது என அரசு பலமுறை எச்சரித்தாலும் ரீல்ஸ் மோகத்தால் திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து புதூர் உத்தமனூரில் சேர்ந்த அஜீத் என்பவர் அவரது அண்ணன் மகனை மது குடிக்க வைத்து வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து சிறுவனுக்கு மது ஊற்றிக்கொடுத்து குடிக்க வைத்து அதனை வீடியோ பதிவு செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருந்த திருச்சி மாவட்டம். புதூர் உத்தமனூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞரை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வ நாகரத்தினம், உத்தரவின்படி காணக்கிளியநல்லூர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision