சவுக்கு சங்கரை திருச்சி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் ஏ டி எஸ் பி - பரபரப்பு

சவுக்கு சங்கரை திருச்சி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் ஏ டி எஸ் பி - பரபரப்பு

தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய யூடிபர் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டு தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களையும் இழிவுபடுத்தி உள்நோக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்கள் என்பது காவல்துறையின் குற்றசாட்டு.

இதனால் தமிழ்நாடு காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்து பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது திருச்சி மாவட்டம் முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் M.A. யாஸ்மின், கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்டம் சைபர் கிரைம் . 21/24 U/s 294(b), 353, 509 IPC, 67 IT act and 4 of TN prohibition of harassment of women act ஆகிய பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்ட கணினிசார் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் (08.05.24) ஆம் தேதி காலை திருச்சி மாவட்ட கணினிசார் குற்றப்பிரிவு குற்ற எண் : 21/24 U/s 294(b), 353, 509 IPC, 67 IT act and 4 of TN prohibition of harassment of women act வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை சம்பிரதாய கைது (Formal arrest) செய்தனர். மேலும், இவ்வழக்கின் இரண்டாம் குற்றவாளியான பெலிக்ஸ் ஜெரால்டு என்பவரை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் டெல்லியில் சென்று கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கிற்காக கோவை மத்திய சிறையில் இருந்த அவரை பெண் காவலர்கள் கோவையில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். நேற்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை லால்குடி கிளை சிறையில் ஒரு நாள் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து இன்று மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞர் சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிந்த நிலையில், ஒரு நாள் மட்டும் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட கணினிசார் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் தனி அறையில் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்தி வருகிறார். இன்று மாலை 4 மணியிலிருந்து நாளை மாலை 4 மணி வரையில் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்தலாம் என்றும், அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மூன்று முறை நேரில் சந்திக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

காவல் நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது யாரும் உள்ளே நுழைய முடியாது அளவிற்கு மிக ரகசியமாக விசாரணை நடைபெற்று வருகிறது விசாரணை அதிகாரியாக இருக்கும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தொடர்ந்து நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision