திருச்சி அரசு மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியது மருத்துவர்களும் சிகிச்சை பெற முடியாத நிலை

திருச்சி அரசு மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியது மருத்துவர்களும் சிகிச்சை பெற முடியாத நிலை

திருச்சி அரசு மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிறப்பு வார்டு உள்ளது. இதில் மட்டும் தான் ஆக்சிஜன் கூடிய வசதி உள்ளது. கடந்த மூன்று நான்கு நாட்களாக தினமும் 700ல் இருந்து 780 என கோவிட் தொற்று டையவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது மட்டுமல்லாமல் கோவிட் தொற்று அறிகுறிகள் இல்லாத நோயாளிகள்  தனியாக மூன்று இடங்களில் கோவிட் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகிறது.

திருச்சி அரசு மருத்துவமனையில் 20ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட உருளை தொடர்ந்து இயங்கி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது தற்பொழுது ஏற்படவில்லை.ஆனால் படுக்கையில் அனைத்துமே நிரம்பிவிட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினரும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகள் அனைத்திலும் இடம் இல்லாமல் தவித்து மருத்துவர் குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர்.

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி வழிகிறது.ஒரு நோயாளி சிகிச்சை முடிந்து வெளியில் வந்தவுடன் அவருடைய படுக்கைக்கு நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .இதே நிலை இன்னும் இரண்டு நாள் நீடித்தால் மிகப் பெரிய இன்னலுக்கு கோவிட் தொற்று உடையவர்கள் ஆளாவார்கள். மாவட்ட நிர்வாகத்தை பொறுத்த அளவு கோவிட் தொற்றால் மருத்துவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் கூடுதலாக 300 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் விரைவில் செயல்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் மருத்துவ சங்கத்தின் கோரிக்கை கோவிட் சிகிச்சை மையங்களிலும் ஆக்சிஜன் கூடிய மருத்துவ வசதி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இன்னும் வரும் நாட்கள் சவால் நிறைந்ததாக இருக்கும் .ஆகவே உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon