அமமுக திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர். மனோகரன் தீவிர ஓட்டு வேட்டை

அமமுக திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர். மனோகரன் தீவிர ஓட்டு வேட்டை

 அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர். மனோகரன்  மலைக்கோட்டை பகுதிக்குட்பட்ட 16வது வார்டு 17 வது வார்டு 18 வது வார்டு ஆகிய வார்டுகளில் பெரிய கடை வீதி ,பெரிய கம்மாள தெரு ,சின்ன கம்மாள தெரு ,பெரிய சௌராஷ்டிரா தெரு, சின்ன சௌராஷ்டிரா தெரு ,பெரிய செட்டி தெரு சின்ன செட்டி தெரு ,டைமண்ட் பஜார் உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக நேரில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக மலைக்கோட்டை பெரியகடைவீதி மையப் பகுதியில் அமைந்துள்ள  பைரவர் திருக்கோயில் சிறப்பு தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரம் துவங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் சாத்தனூர்  ராமலிங்கம் மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் செல்வகுமார் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் பழனிமாணிக்கம் 16வது வார்டு வட்ட கழக செயலாளர் சுதாகர் 17 வது வட்ட பொறுப்பாளர் லாவண்யா செல்வராஜ் 18 ஆவது வட்ட கழக செயலாளர் திரு லோகு மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சார்ந்த மாவட்ட கழக செயலாளர்  டிவி கணேசன் தேமுதிக மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் திரு நூர் முகமது மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட மாவட்ட பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


திருச்சி மாநகராட்சி 8வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி தலைவர் சுதாகர்   அதிமுகவிலிருந்து விலகி திருச்சி கிழக்கு சட்டமன்ற  தொகுதி வெற்றி வேட்பாளர்  ஆர் மனோகரன் தலைமையில் 300க்கு மேற்பட்டோர்  தங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்  ஆர் மனோகரன் இன்று மாலை 5.30 மணி அளவில் மலைக்கோட்டை பகுதிக்குட்பட்ட 16வது வார்டு காந்தி சிலை அருகாமையில் தீவிர வாக்கு சேகரித்தார்.

 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர் மனோகரன் அவர்கள் காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் ரோடு மையப்பகுதி அமைந்துள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய சமூகத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் சாத்தனூர்  ராமலிங்கம் எஸ்டிபிஐ கட்சியைச் சார்ந்த மாவட்ட தலைவர் ஹாசன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU