அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு

அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் மற்றும் ஒரு இரவுக்காவலர் பணிக்காலியிடம் நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இனசுழற்சி அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணிக்காலியிடத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - பொது-முன்னுரிமையுள்ளோர் (Most Backward Classes / De-notified Communities – General - Priority) அரசாணை (நிலை) எண்:122, மனிதவள மேலாண்மைத்(கே2) துறை நாள் : 02.11.2021-ன்படி தேர்வு செய்யப்படுவர் மற்றும் இரவுக்காவலர் பணிக்காலியிடம் பொதுப்பிரிவினர் - பொது - முன்னுரிமையற்றவர் (General Turn – General-Non-Priority) தகுதியுடையவர்கள் ஆவர்.

அலுவலக உதவியாளர் பணிக்காலியிடத்திற்கு கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரவுக்காவலர் பணிக்காலியிடத்திற்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்காலியிடத்திற்கு 01.07.2022 அன்றைய தேதியில் குறைந்தபட்ச வயது வரம்பு 18-ம், அதிக பட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயதிற்கு மிகாமலும், BC, MBC/DNC பிரிவினர் 34 வயதிற்கு மிகாமலும், SC/ST மற்றும் SCA பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தகுதியான மனுதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்று, உரிய விவரங்களை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் (பின்புறம்) திருச்சிராப்பள்ளி - 620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.

இவ்விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் (27.01.2023) மாலை 5.45 மணிக்குள். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்பட மாட்டாது என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO