முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நூலகப் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசியக் கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த இளங்கலை மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை (18.07.2024) அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேசியக் கல்லூரியின் செயலாளர் கா. ரகுநாதன் RFID மற்றும் பார்கோடு (Bar-Code) பயன்பாட்டுடன் கூடிய கல்லூரியின் அடையாள அட்டையையும் நூலகத்தின் நூல்கள் வழங்கும் அடையாள அட்டையையும் வழங்கி சிறப்பித்தார். தேசியக் கல்லூரியின் முதல்வர் முனைவர் கி. குமார் தலைமையுரையும் நிகழ்த்தி சிறப்பித்தார்.
கல்லூரியின் நூலகர் முனைவர் த.சுரேஷ்குமார் தேசியக் கல்லூரியின் நூலக விதிமுறைகள் மற்றும் நூல்கள் மின்னணு புத்தகங்கள், மின்னணு நாளிதழ்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை தங்கள் அலைபேசி மூலம் மாணவர்கள் தேசியக் கல்லூரியின் நூலகத்தில் உள்ள அனைத்து கற்றல் வளங்களையும் பெற முடியும் என்பதை விரிவாக விளக்கினார்.
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தேசியக் கல்லூரி நூலகத்தில் உள்ள சேவைகள் அனைத்தும் நவீன கணினிமயமாக்கப்பட்டதையும் அதை எவ்வாறு பெற முடியும் என்பதையும் விரிவாக மாணவர்களுக்கு, செய்முறை விளக்கத்தோடு சிறப்பாக வழங்கினார்.
கல்லூரி நூலகத்தில் உள்ள கற்றல் வளங்கள் அனைத்தும் தங்கள் அலைபேசி மூலம் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் எவ்வாறு பெற முடியும் என்பது விளக்கமாக நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. நிறைவாக நூலகத்திற்கு தேவையான அதிநவீன வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்த கல்லூரியின் செயலர் மற்றும் முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் மாணவர்கள் தங்கள் முழுத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் கல்லூரி நூலகத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். சிறப்பு விருந்தினர் இயற்பியல் பேராசிரியர் முனைவர் M இளந்திரையன், தேசிய கல்லூரி, மாணவர்கள் நூலகத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையமுடியும் என்பதை விவரித்தார். நூலகம் என்பது நம் வாழ்வின் முன்னேற்றத்தில் தவிக்கமுடியாத ஒன்றாகும். மாணவர்கள் தாங்கள் போட்டி தேர்விற்கு எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை விரிவாக எடுத்துரைத்துரைத்தார்.
தேசியக் கல்லூரியின் இறுதியாண்டு முதுகலை மண்ணியல் துறை இறுதி ஆண்டு மாணவி எழில் நன்றியுரை நல்கினர். மண்ணியல் துறை மாணவர் அருள் மாரீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தேசியக் கல்லூரியின் நூலக தட்டச்சுப் பயிற்றுனர் அன்புமணி, துணை நூலகர் ராதா ஜெயலக்ஷ்மி, கல்லூரி நூலக அலுவலர்கள் லட்சுமணன் கலியமூர்த்தி, உமா மகேஸ்வரி மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்லூரியின் ஆராய்ச்சி மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision