நேரு நினைவுக் கல்லூரியில் பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று 27.03.2025 ம் தேதி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் IPS அவர்களின் தலைமையில் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணன் அவர்களுடன் புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தனாம்பட்டி
நேரு நினைவு கல்லூரி நிறுவனத்தலைவர் திரு. பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுடன் ஒன்றிணைந்து மாணவ மாணவிகளுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான உதவி எண் 181, 112, kavalan உதவி APP மற்றும் பெண்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும்
போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு குறித்தும் அறிவுரைகள் வழங்கி பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மொத்தம் - 2500 பேர் கலந்து கொண்டார்கள். மாணவ மாணவியர் 2500 பேருக்கு காவலன் உதவி அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision