திருச்சி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பதற்றமான பகுதிகளில் மத்திய ரிசவர் காவல் படையினர் ஆய்வு

திருச்சி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பதற்றமான பகுதிகளில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஆய்வு
மத்திய ரிசர்வ் காவல் படையினர் தமிழக காவல்துறையினருடன் இணைந்து சட்டம், ஒழுங்கு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பராமரிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு குழுக்களாக சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கோயமுத்தூர் 105 மத்திய ரிசர்வ் காவல் படையினர் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.இதன் தொடர்ச்சியாக மத்திய ரிசர்வ் காவல் படையின் உதவி கமாண்டன்ட் ராஜேஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் புவனேஸ்வர், மணிகண்டன் உள்ளிட்ட 27 மத்திய ரிசர்வ் காவல் படையினர் நம்பர் ஒன் டோல்கேட், கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொள்ளிடம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கலவரம் ஏற்படும் பகுதிகள் குறித்து அறிக்கை பெற்றுக்கொண்டு பின்னர் பதற்றமான பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து மத்திய ரிசர்வ் காவல் படையின் உதவி கமாண்டன்ட் ராஜேஸ் கூறுகையில் தமிழகத்தில் கலவரங்களின்போது ஏற்படும் மோதல்களை தடுப்பது, பாதுகாப்பு மேற்கொள்வதற்கும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.ஆகையால் தமிழக காவல்துறையினருடன் இணைந்து சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளோம்.
இந்த ஆய்வின்போது மிகவும் பதற்றமான பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அந்த இடத்தின் வரைபடம், கலவரம் ஏற்படும் பட்சத்தில் எவ்வாறு தடுப்பது மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். முடிவில் ஆய்வு அறிக்கை ஒன்றை தயார் செய்து தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கின்றோம் என கூறினார்.
இந்த ஆய்வின்போது கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சேவியர் மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision