திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு அதிர்ஷ்ட பெட்டி

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு அதிர்ஷ்ட பெட்டி

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் 24 மணி நேரம் கொரோனா தடுப்பூசி மையத்தில் மெகா தடுப்பூசி முகாமை முன்னிட்டு அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு அதிர்ஷ்ட பெட்டியை கல்லூரி முதல்வர் மருத்துவர் வனிதா அவர்கள் தொடங்கி வைத்தார்.

பின்னர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த முதல் 50 நபர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். மேலும் இந்த விழிப்புணர்வு அதிர்ஷ்ட பெட்டியில் கூப்பன்களை பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு பூர்த்தி செய்து போட்டனர். அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரத்த அழுத்தமானி பரிசாகவும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் சமூக நல அமைப்புக்கு பாராட்டு கோப்பையும் வழங்கப்படும்.

மேலும் இன்று தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்பு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் செல்பி பூத் அமைக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் மற்றும் கொரோனா தடுப்பு ஊசி இரண்டும் யுத்தம் செய்து கொள்வது போல சைக்கிள் விழிப்புணர்வு மருத்துவ மாணவர்களால் ஏற்படுத்தப்பட்டது.

தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள இன்று வருகை புரிந்தவர்கள் மரக்கன்று மற்றும் அதிர்ஷ்ட பெட்டியில் கூபன் செலுத்துவது உள்ளிட்ட வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் மிகுந்த ஆர்வத்துடன் பொதுமக்கள் முகாமில் பங்கெடுத்தனர். மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn