திருச்சியில் நின்ற காரில் இறந்த நிலையில் சடலம் - போலீசார் விசாரணை

திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்து நிலையத்தில் ஒரு கார் சந்தேகப்படும்படியாக நிற்பதாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியமங்கலம் போலீசார் காரின் கதவை திறந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் ஒருவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அரியமங்கலம் போலீசார் இறந்து கிடப்பவர் யார் என்று காரில் இருந்த ஆவணங்களை வைத்து பார்த்த பொழுது அவர் லால்குடி அருகே உள்ள ஆங்கரை மலையப்பன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் பிரவீன் குமார் (30)
இவர் தனக்கு சொந்தமான காரை திருச்சி அரிஸ்டோ பகுதியில் நிறுத்தி வாடகைக்கு ஓட்டிவருவதும் தெரியவந்தது.மேலும் பிரவீன் குமார் நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து சவாரிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்து நிலையத்தில் நின்ற காரில் உள்ளே பிரவீன் குமார் இறந்து கிடந்துள்ளார்.
அரியமங்கலம் போலீசார் தடயவியல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடயவியல் துறை ஏ டி ராஜேந்திரன் தலைமையில் காரில் உள்ள தடயங்களை சேகரித்தனர்.பின்னர் பிரவீன் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து பிரவீன் குமார் இங்கு எதற்காக வந்தார் காரின் பின் இருக்கையில் போய் எப்படி இறந்துள்ளார் என பல கோணங்களில் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision