திருச்சியில் நேற்று(05.06.2022) பெய்த மழை அளவு விவரம்

திருச்சியில் நேற்று(05.06.2022) பெய்த மழை அளவு விவரம்

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் முடிந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கணிசமாக குறைய தொடங்கி உள்ளது. திருச்சியில் நேற்று பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு இருந்தது. ஆனால் மாலைக்கு பிறகு பலத்த காற்று வீசியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். பின்னர் வானில் கருமேகம் திரண்டது. இதனைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் ஆங்காங்கே பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் பகல் நேரத்தில் இருந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று (05.062022) பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம்,.....லால்குடி 44.00மிமீ, நந்தியார் ஹெட் 20.20 கள்ளிக்குடி 19.20, தேவமங்கலம் 15.20 மிமீ,சமயபுரம் 11.40மிமீ,வாத்தலை அணைக்கட்டு 3.20மிமீ, முசிறி 1.00மிமீ, புலிவலம் 15.40மிமீ, நவலூர் குட்டப்பட்டு8.40மிமீ, தேன்பரைநாடு1.00 மிமீ, துறையூர் 20.00மிமீ, கொப்பம்பட்டி 2 மிமீ, பொன்மலை 13.40 மிமீ, திருச்சி விமான நிலையம் 1.80மிமீ, திருச்சி ஜங்ஷன் 4.00மிமீ, திருச்சி டவுன் 2 மிமீ என்ற அளவில் பதிவாகியுள்ளது. திருச்சியில் மொத்தமாக பெய்த மழை அளவு 221.70 மிமீ, சராசரியாக 9.24மிமீ என்ற அளவில் பதிவாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO