திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி குறித்த தேதிகள் விளக்கம்

பக்தர்கள் ஜோதிடர்கள்,அர்ச்சகர்கள்,மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனிப்பெயர்ச்சி தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக 2025 மார்ச் 29 அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வந்துள்ளன. இது தொடர்பாக திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணிய திருத்தலம் வாக்கிய பஞ்சாங்கம் முறையை பின்பற்றுவதை தெளிவுப்படுத்துகிறோம். இந்தப் பாரம்பரிய கணிப்பு முறையின்படி 2026 ஆம் ஆண்டிலேயே சனிப்பெயர்ச்சி நடைபெறும் என தெரிவிக்கிறோம்.
ஆகையால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தளத்தில் சனிப்பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
பக்தர்கள் ஜோதிடர்கள் அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிப்பாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision