கடந்த ஆண்டு காவலர் தேர்வில் இறுதிநிலை தகுதி பெற்றவர்கள் – ஆறு மாதத்திற்கு எந்தவித சம்பளமும் வேண்டாம்! வேலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

கடந்த ஆண்டு சீருடை பணியாளர்கள் தேர்வான இரண்டாம் நிலை காவலர் தேர்வு நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அப்போதைய காலிப்பணியிடங்கள் 8888 போக மீதி 11 ஆயிரம் பேர் இறுதிநிலை தேர்ச்சி பெற்று இருக்கின்றன.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீருடை பணியாளர் இறுதிநிலை தேர்ச்சி பெற்றவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் “நாங்கள் அனைவரும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற காவலர் எழுத்து தேர்விலும், உடல் தேர்விலும், சான்றிதழ் சரிபார்ப்பு தேர்விலும் தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் பின்தங்கியவர்கள் தான். தோல்வியடைந்தவர்கள் அல்ல.

Advertisement

எனவே எங்களுக்கு இந்த வருடம் காலிப்பணியிடங்களில் வாய்ப்பளித்தால் மருத்துவ பரிசோதனை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், காவலராக தேர்வு செய்யப்பட்டால் அடுத்த ஆறு மாதத்திற்கு எந்தவித சம்பளமும் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் கடந்த 2006ஆம் ஆண்டு காலிப்பணியிடங்கள் போக பின்தங்கிய அவர்களுக்கு அப்போதைய தேர்தலை கருத்தில் கொண்டு காவல்துறையில் பணி வழங்கப்பட்டது. எனவே அடுத்து வரக்கூடிய சட்டசபை தேர்தலுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகம் தேவைப்படுவதால் தற்போது இந்த கொரோனா காலகட்டத்தில் காவல்துறையில் பணியாற்ற ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.