கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கனிவும் காட்டிய திருச்சி காவலர்!!

இந்த கொரோனா காலகட்டம் ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் ஒரு புதிய அனுபவங்களை கற்றுக் கொடுத்திருக்கும்! ஊரடங்கு, வேலைவாய்ப்பு இன்மை, போக்குவரத்து இயங்காமை, சொந்த ஊருக்கு நடந்து செல்லுதல், கொரோனா பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என காலங்கள் கடந்து வருகின்றன. காவல்துறையினர் மீது தற்போது நிலவி வரும் காலகட்டத்தில் பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வரும் சூழ்நிலையில் இதுபோல் காவலர்களும் உள்ளனர் என நிரூபித்திருக்கிறார் நம்முடைய திருச்சி காவலர்!!

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருபவர் S.திருமுருகன். ரோந்து பணியில் இருந்த பொழுது
50 வயது தக்க பெண்ணை உணவு வழங்கி கருணை இல்லத்தில் சேர்த்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்!

இதுகுறித்து காவலர் திருமுருகனிடம் பேசினோம்…. வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இந்த அம்மாவை பார்த்தேன். அவரின் பெயர் பழனியம்மாள்(50), பூக்காரத்ர தெரு மச்சுவாடி புதுக்கோட்டை என்றும் அவரது மகன் பெயர் கணேஷ் திருமயத்தில் மளிகைக் கடை வைத்து உள்ளார் என்றும் தெரிவித்தார்.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருப்பூரில் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றதாகவும் அங்கு வேலை இல்லை என்ற காரணத்தால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருப்பூரிலிருந்து கரூருக்கு பஸ்ஸில் வந்ததாகவும் அங்கிருந்து பஸ் இல்லாத காரணத்தினால் நடந்தே திருச்சி வந்ததாகவும் கடந்த இரண்டு நாட்களாக திருச்சியில் இருப்பதாகவும் கூறினார்.

பார்ப்பதற்கு மிகவும் களைப்புற்று இந்தநிலையில் இருந்தார்.உடனே அருகிலிருந்த உணவகத்திற்கு சென்று உணவு மற்றும் தண்ணீர் வாங்கி வந்து அந்த அம்மாவிடம் கொடுத்தேன். பின்பு அவரது மகன் கணேஷ் இடம் தகவல் தெரிவித்தேன். வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பட்டுமா?என்று கேட்டதற்கு “அவங்க எங்க போறாங்கனு கேளுங்கள்” அப்படின்னு ஒரு மாதிரியாக பதில் கூறினார்.

Advertisement

உடனே உங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடட்டுமா என்றேன். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்ததார். திருச்சி கிராப்பட்டி கங்காரு முதியோர் இல்லத்திற்கு தகவல் தெரிவித்தேன் அவர்களும் சம்மதம் தெரிவித்து அந்த அம்மாவை அழைத்து சென்றார்கள். என்றார்

ஒரு சில காவலர்கள் செய்யும் செயல்களால் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் நாம் இவரைப்போல பலரும் இச்சமுதாயத்தில் காவல் பணியோடு சேர்த்து சமூக பணியையும் செய்து வருகிறார்கள். எனவே நம்முடைய திருச்சி ஹீரோ திருமுருகனுக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.