சோமரசம்பேட்டை எம்ஜிஆர் சிலை பின்புறம் தீவிபத்து

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமர்சம்பேட்டை பகுதியில் எம்ஜிஆர் சிலை பின்புறம் வெற்றிலை பாக்கு, மற்றும் வாழைப்பழம்,இலை, காய்கறிகள், பூக்கடை என எட்டுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு
வந்த நிலையில் இரவு அந்த பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது, இதில் கடைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது இதனை அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர், தொடர்ந்து சோமரசம்பேட்டை போலீசார் தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision