“இப்பள்ளிக்கூட மாணவர்களைப் பார்த்து சந்தோஷ மடைந்தேன்”- திருச்சி பள்ளிக்கு வருகை புரிந்த காமராஜர்!!

“இப்பள்ளிக்கூட மாணவர்களைப் பார்த்து சந்தோஷ மடைந்தேன்”- திருச்சி பள்ளிக்கு வருகை புரிந்த காமராஜர்!!

கல்விக் கண் திறந்த காமராஜரின் 118 பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நம்முடைய திருச்சி மாநகருக்கு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவும் மற்றும் சுதந்திரம் அடைந்த பின்பு தமிழகத்தின் முதல்வராக பதவியேற்று திருச்சியின் பள்ளிக்கு வருகை புரிந்ததால்  ஒட்டுமொத்த திருச்சியுமே அவரால் பெருமை பெற்றுள்ளது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலைத்திங்கள் 15-ஆம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக  பள்ளிகள் செயல்படாத காரணத்தினால் அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாணவர்கள் அழைக்கப்படாமல் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவப்படத்தை பள்ளியில் அலங்கரித்து ஆசிரியர்கள் மலர்தூவி வணங்கினர்.நம்முடைய திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி தான் காமராஜரின் கால் பட்ட இடம்!

Advertisement

சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளிக்கு பெருந்தலைவர் காமராசர் அவர்கள் இருமுறை வருகை தந்துள்ளார். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் 24.06.1947ல் ஒருமுறையும் , தமிழக முதல்வராக 17.03.1955ல்  ஒருமுறையும் வருகைபுரிந்து பள்ளிக்கு சிறப்பு சேர்த்துள்ளதை அவரது  118வது பிறந்தநாளான இன்று நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்கிறது இப்பள்ளி. தலைமைையாசிரியர் ஜீவானந்தம் மற்றும்் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியின் இப்பள்ளி வரலாற்று சிறப்புமிக்க ஒரு கல்விக் கூடமாகவும் இன்றளவும் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. காமராஜர் சுப்பையா நினைவு நடுநிலைப் பள்ளிக்கு ஜூன் 6ம் தேதி 1947ம் ஆண்டு வரும் போது.. “இப்பள்ளிக்கூட மாணவர்கள் மாணவிகள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாய் இருப்பதைப் பார்த்து சந்தோசம் மடைந்தேன்”  என்று குறிப்பிட்டுள்ளார். காமராஜரின் பிறந்த நாளான இன்று  மாணவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட ஆசிரியர்களால் அன்னாரை நினைவு கூர்ந்து செயல்படுகிறது இப்பள்ளி!