வாட்ஸ்அப் குரூப்பில் வைரலாகி வரும் 'திகில் மன்னன்' எச்சரிக்கை ஆடியோ

trichy police warning audio public

வாட்ஸ்அப் குரூப்பில் வைரலாகி வரும் 'திகில் மன்னன்' எச்சரிக்கை ஆடியோ

திருவெறும்பூர் பகுதி மக்களின் பலரது வாட்ஸ்அப் குரூப்பில் உலா வரும் திகில் மன்னன் பற்றி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஆடியோ பேசி பொது மக்களுக்கு வெளியிட்டு உள்ளார்.

திருவெறும்பூரில் வசிக்க கூடிய பொதுமக்களின் பலரது வாட்ஸ் அப் செய்தியில் நேற்றைய தினம் ஒருவரது புகைப்படத்துடன்  ஒரு காவல் அதிகாரி எச்சரிக்கை செய்த ஆடியோவுடன் வைரலாகி வலம் வந்தது. இச்செய்தியை பார்த்தவர்களும் கேட்டவர்களும் பரபரப்புடன் அவர்களது வாட்ஸ் அப் குரூப் நண்பர்களுக்கு பகிர்ந்து வந்தனர்.

அந்த செய்தியில் தஞ்சாவூர் ஒரத்தநாடு அரசப்பட்டு மேலத் தெருவை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் விக்கி என்கின்ற விக்னேஸ்வரன் வயது 45 எனும் முகவரியுடன் திடகாத்திரமான ஒரு வாலிபரின் புகைப்படம் இருந்தது.

இவரைப் பற்றி எச்சரிக்கை விழிப்புணர்வு ஆடியோவில் அதில் மேற்படி நபர் பஜாஜ் டிஸ்கவர் வாகனத்தில் சென்று வருகிறார் தனியாக  வீட்டில் உள்ள முதியவர்களிடம் உறவினர் போல் அறிமுகமாகி அவர்களது கவனத்தை திசை திருப்பி  அவர்களின் பணத்தை அவர்களே எடுத்து கொடுக்கும் அளவிற்கு வசியைப் படுத்தி பேசி பணத்தை   நூதன முறையில் பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விடுகிறார்.

நேற்றைய தினம் வேங்கூர் பகுதியில் ஒரு வீட்டில் முயற்சி செய்யும் பொழுது அவர்கள் உஷாரானதால் தலைமுறை ஆகிவிட்டார். இவர் தஞ்சாவூரில் 100 ஏக்கர் நிலத்துடன் பெரிய பணக்காரர் என்று சொல்லப்படுகிறது ஆனால் இது மாதிரியான நூதன மோசடியில் ஈடுபட்டு திருவெறும்பூர் பகுதியை தற்பொழுது குறி வைத்து நடமாடி வருவதாக சொல்லப்படுகிறது.

ஆகவே திருவெறும்பூர் பெல் நிறுவனம் நவல்பட்டு இந்த பகுதியில் உள்ள போலீஸ் பீட் ஆபிஸர்ஸ் கவனமுடன் இவனது நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் இந்த செய்தியை அனைவருக்கும் பகிர வேண்டும் பொதுமக்கள் கையில் மேற்படி நபர் சிக்கி நமக்கு தகவல் கிடைக்கவும் இதில் வாய்ப்பு உள்ளது.

ஆகவே பீட் ஆபிஸர்ஸ் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என்று அந்த ஆடியோவில் காவல் அதிகாரி பேசி இருந்தார்.  அதில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் இவரைப் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆடியோவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இதுகுறித்து திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் அவர்களிடம் விசாரித்த பொழுது அவர் கூறுகையில் பொதுமக்களுக்கான எச்சரிக்கை விழிப்புணர்வு செய்துள்ளேன் மற்றபடி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இது பற்றி எந்த புகாரும் இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார்.

அடுத்து நவல்பட்டு இன்ஸ்பெக்டர் நிக்ஸன் கூறுகையில் நவல்பட்டு காவல் நிலைய எல்லைப் பகுதியில் இது மாதிரி எந்த சம்பவங்களும் இதுவரைக்கும்  வரவில்லை என்று கூறினார். இச்செய்தி திருவெறும்பூர் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய...

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision