நேசிப்புக்கும் ஆசிப்க்கும் உரியவரகத் திகழ்ந்து வந்தவர் குமரி அனந்தன்-கே. எம். காதர் மொகிதீன் அறிக்கை

நேசிப்புக்கும் ஆசிப்க்கும் உரியவரகத் திகழ்ந்து வந்தவர் குமரி அனந்தன் ஐயா அவர்கள் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அறிக்கை
நேசிப்புக்கும் ஆசிப்க்கும் உரியவரகத் திகழ்ந்து வந்தவர் குமரி அனந்தன் ஐயா அவர்கள் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தெரிவித்தார். இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தங்கத் தமிழகத்திற்குப் பொங்குபுகழ் சேர்த்து வாழ்ந்த இலக்கியச் செல்வர் உயர்திரு குமரி அனந்தன் அவர்கள் தமது 93 அகவையில் பண்ணுலகைப் பிரிந்து விணிணுலகம் எய்திய செய்தி நெஞ்சைக் குலுக்கியது. பிறந்தவர் அனைவரும் இறப் பெய்துவர் என்பது இயற்கையே ஆனால் பலர் மண்ணுக்குப் பாரமாக இருந்து விட்டால் போதும் என்று கூறும் அளவில் வாழ்ந்து
வருவதைப் பார்க்கும் உலகம் ஒரு சிலர் மண்ணில் எப்போதும் வாழ்ந்திட வேண்டும் என்றும் அவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு காலத்திலும் ஏற்ற அறிவுரைகளை அள்ளிக் கொடுத்திட வேண்டும் என்றும் ஆசிப்போர் உள்ளனர்.
அத்தகைய நேசிப்புக்கும் ஆசிப்க்கும் உரியவரகத் திகழ்ந்து வந்தவர் குமரி அனந்தன் ஐயா அவர்கள். அவரின் இலக்கிய உரைகள் யாவும் புதிய கோணத்தில் அமைந்திருந்தன, அவரின் அரசியல் விரிவுரைகள் மக்களின் மத்தியில் ஜனநாயகத்தை சமயச் சார்பின்மையை வேற்றுமையில் ஒற்றுமைகள் வலியுறுத்துவதாகவே இருக்கிறது. சட்டமன்ற மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவர் ஏற்படுத்திய முன்மாதிரிகள இன்றும் போற்றப்படுகின்றன. தமிழின் பெருமையை, தமிழப் பண்பாட்டின் சிறப்பை, தமிழின்
தொன்மையை தமிழின் வளத்தையும், உலக மொழிகளுக்கு கெல்லாம் தமிழ் எத்துணை அளவுக்க மூல மொழியாகத் திகழ்ந்திருக்கிறது என்பதையும் காலமெல்லாம் வலியுறுத்தி, தனியொரு வரலாறு படைத்த பெருமை அவருடையது. தமிழக முஸ்லிம் சமுதாயத்தோடு, இ. யூ மு லீக் தலைவர்கள் காயிதே மில்லத், சிராஜுல் மில்லத், அப்துல் லத்தீப் சாஹிப் மற்றும் இந்த எளியவனோடும் மிக நெருங்கிப் பழகி,
பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரைகளும் அறவுரைகளும் வழங்கிய பெருமகன் அவர். அவர் நடத்திய ஒவ்வொரு போராட்டத்திலும் இ யூ மு லீக்கை அழைத்துப் பெருமைப்படுத்தி வந்தார். அவர் வாழும் காலமெல்லாம் நல்லது செய்தே வாழ்ந்தார். அவர் வழியில் நாடும் நாமும் செல்வோம். இறையருள் எங்கும் பரவுமாக இவ்வாறு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision