மது போதையில் தன் நண்பரை துப்பாக்கியால் சுட்டவர் கைது

மது போதையில் தன் நண்பரை துப்பாக்கியால் சுட்டவர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி வட்டம் செங்கையூரை சேர்ந்த முருகேசன் மகன் பாண்டித்துரை நேற்று தனது நண்பர்களாகிய வீரமணி குட்டிஸ் ஆகிய இருவருடன் சேர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி

கிராமத்தில் மது அருந்திவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான செங்கையூருக்கு வரும்பொழுது அன்பில் கிராமத்தில் தனது நண்பர்கள் ஆன சந்தோஷ்குமார் ஜெகன் மற்றும் ஆனந்தன் ஆகிய நபர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த நிலையில் பாண்டித்துரைக்கு மது போதை அதிகமானதால் தனது இரு சக்கர

வாகனத்தினை அங்கே வைத்து விட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டனர்.பின்னர் நேற்று (8/04/ 2025) இரவு 2:30 மணி அளவில்  பாண்டித்துரை வீட்டிற்கு சென்றவுடன் தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என வீரமணி என்பவர் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். இந்நிலையில் பாண்டித்துரை மது போதையில் தனது இருசக்கர வாகனத்தை அன்பில் கிராமத்திலேயே விட்டுச் சென்றதை சந்தோஷ்

ஆனந்த் மற்றும் ஜெகன் ஆகிய மூவரும் பாண்டித்துரையின் வீட்டிற்கு சென்று கொடுத்த போது பாண்டித்துரை தனது வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த சந்தோஷ் ஆனந்த் மற்றும் ஜெகன் ஆகிய மூவரையும் நோக்கி கொக்கு  சுடும் Airgun துப்பாக்கி  கொண்டு சுட்டுள்ளார். அவ்வாறு Airgun  சுடப்பட்டபோது சந்தோஷ் அடி வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.  சந்தோஷ்குமாருக்கு லால்குடி அரசு

மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட  நிலையில் சிகிச்சை பெற்று உள்ளார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பாண்டித்துரை மீது

 லால்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பாண்டித்துரை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision