விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் அங்கீகார வெற்றி விழா

நாளை (16.03.2025) விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேர்தல் அங்கீகார வெற்றி விழா தலைவர் வைகோ அவர்களின் பங்கேற்புடன் நடைபெற உள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.
எழுச்சித்தமிழர் முனைவர் அண்ணன் தொல். திருமாவளவன் எம்பி அவர்கள் தாழ்த்தப்பட்ட, பட்டியலின பழங்குடி மக்கள் மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன, விளிம்பு நிலை ஒடுக்கப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் தலைவராக உயர்ந்து வருகிறார். அ
அவரது உழைப்பிற்கும் தியாகத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகாரத்தை நான் கருதுகிறேன். அண்ணன் திருமா அவர்கள் பல தருணங்களில் குறிப்பிட்டதை போல அவரது ஆரம்பகால அரசியல் ஈர்ப்பிற்கு தலைவர் வைகோ அவர்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். அதுபோல அண்ணன் திருமா அவர்களின் உழைப்பு அரசியல் பணியில் எனக்கும் ஊக்கமாக உள்ளது.
அண்ணன் திருமா அவர்கள் தலைவர் வைகோ மீது அளவற்ற அன்பும் பற்றுதலும் கொண்டவர். அதற்கு உதாரணமாக கலிங்கப்பட்டியில் நடந்த மது ஒழிப்பு போராட்டத்தின் போது காவல்துறை, தலைவரையும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களையும் நோக்கி கண்ணீர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டபோது, அருகில் சங்கரன்கோவிலுக்கு வந்திருந்த அண்ணன் திருமா அவர்கள் இந்த செய்தியை கேள்விப்பட்டு உடனே கலிங்கப்படிக்கு விரைந்து வந்து விடுதலை சிறுத்தைகளோடு தலைவருக்கு அரணாக நின்றது மறக்க முடியாத சம்பவம். தமிழ்நாடு அரசியல் களத்தில் தலைவர் வைகோ அவர்களும் அண்ணன் திருமா அவர்களும் அண்ணன் தம்பியாகவே செயல்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த உறவு இனியும் வலுபெறும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அங்கீகாரம் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இது அனைத்து சிறுத்தைகளின் போராட்ட குணத்திற்கும், தாய் சிறுத்தையான அண்ணன் திருமா அவர்களின் மிக மேலான உழைப்பிற்கும் தியாகத்திற்கும் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்.விடுதலை சிறுத்தைகளுக்கும் அண்ணன் எழுச்சித்தமிழர் முனைவர் தொல் திருமாவளவன் எம்பி அவர்களுக்கும் இந்த இனிய தருணத்தில் என்னுடைய வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்வதுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்னும் வளர்ந்து தமிழ் மக்களின் உயர்வுக்கு கடமையாற்ற நான் வாழ்த்துகிறேன். என்று துரை வைகோ கூறியுள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision