திருச்சி அரியமங்கலம் சோதனைச் சாவடியில் நீண்ட வரிசையில் சரக்கு வாகனங்கள்!

திருச்சி அரியமங்கலம் சோதனைச் சாவடியில் நீண்ட வரிசையில் சரக்கு வாகனங்கள்!

இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேவையின்றி வாகனங்களில் பயணிப்பவர்களை கண்டறியும் வகையில், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி அரியமங்கலம் சோதனை சாவடியில் சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும், ஒவ்வொன்றாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுப்பப்பட்டு வருவதால் சரக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுப்பி வருகின்றனர்.

Advertisement

மேலும் அரியமங்கலம் அருகில் உள்ள பழைய பால்பண்ணை வெங்காயம் மண்டி மற்றும் ஜி கார்னர் மொத்த காய்கறி சந்தைக்கு தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்து காய்கறிகள் மற்றும் சரக்கு ஏற்றி வரும் லாரிகள் அனைத்தும் திருச்சி மாவட்டத்திற்குள் நுழைய வேண்டுமெனில் அரியமங்கலம் சோதனைச்சாவடியை கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில் அரியமங்கலம் சோதனைச்சாவடியில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. காவல்துறையினர் தொடர்ந்து தேவையின்றி சாலையில் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement