தேசிய கல்விக் கொள்கையை தீயிட்டு கொளுத்திய மாணவர் சங்கம்!
தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் தேசிய கல்வி கொள்கை 2020 ஐ திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் தமிழகம் முழுவதும் நகல் எரிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்திய மாணவர் சங்கத்தினர் திருச்சியில் தங்களது வீடுகளுக்கு முன்பு தேசிய கல்விக் கொள்கையின் நகல்களை எரித்தனர்.