ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 52-வது வார்டுக்குட்பட்ட மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 2020- 2021-ன்  நிதியின் கீழ் உறையூர் பாய்கார தெரு, புத்தூர் அக்ரஹாரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்த நீர்த்தேக்கத் தொட்டி ஆனது அப்பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் சாலைகள் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்தனர். இதன் பணிகளை உடனடியாக செய்து தருவதாக பொதுமக்களிடம் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜி, இளங்கோ மற்றும் புத்தூர் தர்மராஜ், வண்ணை மோகன், தனபால், ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH