சிறுதானியங்கள் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனம்

சிறுதானியங்கள் மகத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வேளாண்மை துறையின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் வட்டாரங்களில் உள்ள பொதுமக்களிடம் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (06.01.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்... திருச்சிராப்பள்ளி மாவட்டத ;தில் 2024-25-ஆம் ஆண்டு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறுதானியங்கள் இயக்கத்தின் கீழ் சிறுதானியங்களின் மகத்துவத்தையும், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய சாகுபடி முறைகளையும், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் பிரச்சார ஊர்தி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியபுரம், மணப்பாறை, மருங்காபுரி மற்றும் வையம்பட்டி வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த பிரச்சார வாகனத்தின் மூலம் வேளாண்மைத் துறை அலுவலர்களால் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 45,000 ஹெக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சிறுதானியப் பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் சிறுதானியப் பயிர்களின் மகத்துவத்தையும், பயன்களையும் எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாநகராட்சி மேயர் அன்பழகன், வேளாண்மை துறை இணை இயக்குநர் பூ.வசந்தா, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சு.சாந்தி, வேளாண்மை துணை இயக்குநர் ஆனந்த செல்வி மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision