5000 பேர் எழுதிய ரயில்வே பதவி உயர்வு தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே தேர்வு!!

5000 பேர் எழுதிய ரயில்வே பதவி உயர்வு தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே தேர்வு!!

தென்னக ரயில்வே துறையின் சரக்கு வண்டி பாதுகாவலர் பணிக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

இதற்கு இந்தியா முழுவதும் 5000 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் 96 பேர் தேர்வாகியுள்ளனர்.அதில் 5 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவராகவும் மீதமுள்ள 97 பேர் வடமாநிலத்தவராக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 5000 நபர்களில் 3000 நபர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். நம்முடைய தென்னக ரயில்வேயில் கூட வடமாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளே வருவது தேர்வு எழுதியவர்களுக்கு மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், மணிகண்டன்,விநாயகமூர்த்தி, முருகப் பெருமாள், முருகன் ஆகிய ஐந்து நபர்கள் மட்டும் தமிழகத்தை சார்பாக தேர்வு பெற்றுள்ளனர். தமிழர்களுக்கு எதிரான விரோதப் போக்கின் மற்றொரு வெளிப்பாடாக இது உள்ளது எனவும் தமிழ் ஆர்வலர்களிடையே ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இது உள்ளது. இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் ரயில்வே துறையில் பணிக்கு அமர்த்துவது மிகப்பெரிய பேராபத்தை கொடுக்கும் என தெரிவித்து வருகின்றனர்.