ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் - பூமி பூஜை தொடங்கி வைத்த பெரம்பலூர் எம் பி

ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் - பூமி பூஜை தொடங்கி வைத்த பெரம்பலூர் எம் பி

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற விழாவில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 5.54 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்காக பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

 

இதைத்தொடர்ந்து வெங்கடேசபுரம் ஊராட்சியில் ரூபாய்34.60 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision