திருச்சி சிவாவுக்கு நாடாளுமன்றத்தின் உயரிய விருது!

திருச்சி சிவாவுக்கு நாடாளுமன்றத்தின் உயரிய விருது!

2019- ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா.

ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த பார்லிமென்டரியன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லோக் மீடியா குழு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பார்லிமென்ட்டேரியன் விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையிலான தேர்வு குழுவினர் திருச்சி சிவாவை இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். வரும் 10 ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறவுள்ள விழாவில் திருச்சி சிவாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதினை வழங்க உள்ளார். இதற்கு முன்பு இந்த விருதை சீதாராம் எச்சூரி குலாம்நபி ஆசாத் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க.வில் மிகச்சிறந்த பேச்சாளராகவும், மாநிலங்களவையில் மாநில உரிமைகள் குறித்து தொடர்ந்து குரலெழுப்புபவராகவும் இருந்துவரும் எம்.பி. திருச்சி சிவா, இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுவதை அறிந்து, தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.