சமயபுரம் கோயில் தேர் திருவிழா காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகின்ற(15. 04.2025)ஆம் தேதி நடைபெற உள்ளது அதுசமயம் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பக்த கோடிகள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிய வருகிறது.எனவே பக்த கோடிகள் சிறப்பான முறையில் தரிசனம் செய்யவும் மற்றும் எவ்வித இடையூறும் இல்லாமல் வந்து செல்வதற்கான அனைத்து வசதிகளையும் திருச்சி மாவட்ட காவல்துறை சிறப்பான முறையில் கீழ்க்கண்ட வகையில் முன்னேற்பாடு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பக்தகோடிகள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு பாக்ஸைப் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதும் விதமாக கனரக வாகனங்களை நாளை( 14. 04.2025 )முதல்
(15.04.2025 )வரை வேறு மார்க்கம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது தேவையான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு பணியாளர்களை ஆங்காங்கே பணியமர்த்தி எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடீரென மயங்கி விழுபவர்களுக்கு மற்றும் உடல் உபாதை காரணமாக பிரச்சனை ஏற்படுபவர்களுக்கும் தற்காலிக மருத்துவர் மனை மருத்துவத் துறையினரால் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆம்புலன் வசதிகள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டு திடீர் பிணியில் பாதிக்கப்பட்ட பக்த கோடிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான வசதிகளும் மருத்துவத் துறைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ச்சி வரும்போது மின்வாரிய ஊழியர்கள் ஆங்காங்கே நியமித்து மின்சாரத்தை உரிய நேரத்தில் தடை செய்தும் மின் கம்பங்களிலிருந்து செல்லும் மின் கம்பிகளை அகற்றியும் எவ்வித இடையூறும் இல்லாமல் தேர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேரோடும் பாதையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி பொதுமக்கள் பக்த கோடிகள் சிறப்பான முறையில் அம்மனை தரிசனம் செய்வதற்காக வழிவகை செய்யப்பட்டுள்ளது. பக்த கோடிகளுக்கு ஆங்காங்கே பாதுகாப்பான குடிநீர் தொட்டி அமைத்து எவ்வித குடிநீர் தட்டுப்பாடும் இல்லாமல் இருக்க ஆணை செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படும் இடங்களில் போதிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நியமித்து உணவில் எவ்வித மாற்றுப் பொருளும் ஏதும் கலக்காமல் இருக்க சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.அது போல் தேரின் உறுதி தன்மையை பொதுப்பணி துறையிடம் இருந்து மற்றும்
மின்சார சாதனங்கள் சம்பந்தமாக மின்வாரியத்தில் இருந்தும் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினரால் 13 கிரைம் டீம் அமைக்கப்பட்டு அதேபோல் மூன்று வெடிப்பொருள் சோதனை மற்றும் கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு ட்ரோன் கேமரா மூலம் சமயபுரம் கோவிலை சுற்றி வெவ்வேறு பகுதியில் இருந்து கழுகு பார்வை மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் 50 cctv கேமரா அமைத்து எவ்வித குற்ற சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க தனிப்படையினரால் கண்காணிக்கப்பட உள்ளது.
மேலும் வாச் டவர் அமைத்து காவலர்கள் மூலம் குற்றவாளிகளை கண்காணிக்க உள்ளனர். தேர் திருவிழாவிற்கு வரும் பெண்கள் அவர்கள் கழுத்தில் அணிந்து வரும் நகைகளை பாதுகாக்கும் வண்ணமாக சேஃப்டி பின் கொடுக்கப்பட்டுள்ள. அவர்களது புடவையுடன் இணைத்துக் கொள்ள ஆவணம் செய்யப்பட்டுள்ளது.நெடுஞ்சாலை துறையின் மூலம் தேரோடும் பாதையில் உள்ள குண்டு குழிகளை செப்பனிட ஆவண செய்யப்பட்டுள்ளது.
தேரோடும் வீதியில் இடியும் தருவாயில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அதில் பொதுமக்கள் யாரும் ஏறாமல் இருக்க வாயில் அடைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகளுக்கு போதிய அளவில் கழிப்பறை வசதிகள் மாவட்ட நிர்வாக மூலமும் கோவில் நிர்வாகமும் ஏற்படுத்தி ஆணை செய்யப்பட்டுள்ளது
மேலும் பாதுகாப்பு பணியில் திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சி மத்திய மண்டலத்தில் இருந்து ஒரு காவல் கண்காணிப்பாளர் நாலு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 16 காவல்துறை கண்காணிப்பாளர் 31 காவல் ஆய்வாளர்கள் 1263 காவல் ஆளுநர்கள் மற்றும் 275 ஊர்காவல் படையினர் நியமிக்கப்பட்டு பக்தக் கோடிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் அம்மன் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட காவல்துறை சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision