கஞ்சா கடத்திய இருவர் தனிப்படை போலீசாரால் கைது

கஞ்சா கடத்திய இருவர் தனிப்படை போலீசாரால்  கைது

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் என் ஐ டி கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேரை திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பெனவாத் தலைமையிலான தனி படை போலீசார் கைது செய்தனர்.

திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பெனாவாத்திற்கு திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அரவிந்த் பெனவாத் தலைமையில் அவரது தனி படை போலீசார் அதிரடியாக திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி என்ஐடி கல்லூரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் 

அப்போது தஞ்சை பகுதியில் இருந்து திருச்சி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர்.பின்னர் அவர்களை போலீசார் துரத்தி பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவர்களிடம் உரிய விசாரணை செய்த பொழுது திருச்சி

 ஸ்ரீரங்கம் இரட்டை வாய்க்கால் வாசன் நகர் ஆறாவது தெருவை சேர்ந்த நல்லுச்சாமி மகன் சதீஷ்குமார் (29), திருச்சி தென்னூர் பட்டாபிராமன் தெருவை சேர்ந்த சிராஜுதீன் மகன் முகமது இசாக் (28) என்று தெரியவந்தது மேலும்அவர்கள் இருசக்கர வாகனத்தில் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது அதன் அடிப்படையில் அவரது வாகனத்தில் இருந்து 4 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவை எங்கு எடுத்து செல்கிறீர்கள் என போலீசார் விசாரணை செய்தபோது அவர்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் துவாக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் அதனடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ எஸ் பி தனி படை போலீசார் வெல் குடியிருப்பு பகுதியில் வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision