மஹாயள அமாவாசை திதி கொடுத்து வழிபட தடை - வெறிச்சோடி காணப்பட்ட ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம்

மஹாயள அமாவாசை திதி கொடுத்து வழிபட தடை - வெறிச்சோடி காணப்பட்ட ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம்

இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடித்து நீர்நிலைகளில் திதி கொடுப்பது வழக்கம். முன்னோர்களை வழிபாடு செய்ய உகந்ததாக கருதப்படும் தை, ஆடி மாதங்களைத் தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தாகும். இந்நாளில் மற்ற இருதினங்களில் திதிகொடுக்க மறந்தவர்களும் இந்நாளில் மூதாதையர்களுக்கு திதிகொடுக்கலாம் என்பது ஐதீகம்.

அதன்படி புரட்டாசி மஹாயள அமாவாசை தினமான இன்று திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் திதி கொடுக்க வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், மாம்பழச்சாலை பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அம்மாமண்டபம்  பிரதான வாயில் கதவு இழுத்து மூடப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. குளிப்பதற்க்கு கூட யாரையும் விடவில்லை என வெளியூர் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று சமூகப் பரவலைத் தடுத்திடும் நடவடிக்கையாக மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மக்கள் கூடி திதி கொடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றின் அனைத்து கரைப் பகுதிகளிலும் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்த்து கொரோனா பரவலைத் தடுத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிட திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn