திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் குடியரசு தின விழா!!

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில்   குடியரசு தின விழா!!

Advertisement

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பால் தயாபரன் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Advertisement

இதில் என்.சி.சி ஆர்மி குழு, விமானப்படை குழு, செஞ்சிலுவை சங்கத்தினர், நாட்டு நலப்பணித் திட்டம், ஹீபர் பாதுகாவலர் சிறப்பு அணிவகுப்புடன், விழாவின் சிறப்பு விருந்தினராக கணிதத் துறை தலைவர் பி . மாரியப்பன் கொடியேற்றி, தலைமை உரையாற்றினார். 

அப்போது அவர் கூறுகையில்..."தேச ஒற்றுமை தான் ஒரு தேசத்தை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்லும்"என்றார்.

Advertisement

மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர்கள் ,பொருளாளர், கலை மற்றும் அறிவியல் புலத் தலைவர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.