ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் வாய்ப்புகளை அள்ளித் தரும் எஸ்எஸ் இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்

ஹோட்டல் மேனேஜ்மென்ட்  துறையில் வாய்ப்புகளை அள்ளித் தரும் எஸ்எஸ்  இன்ஸ்டியூட் ஆஃப்  ஹோட்டல் மேனேஜ்மென்ட்

பல கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எளிய முறையில் வேலை வாய்ப்பை பெற்று தரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் சிறந்த பயிற்சியோடு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது தான் S.S.இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்.

கடந்த வருடம் மார்ச் மாதம் மேல சிந்தாமணியில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. எஸ் எஸ் இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன் இரண்டு இயக்குனர்கள் திருக்கண்ணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு மற்றும் இராம்முத்தையா துபாய் தமிழ்ச் சங்கத்தின் பொதுசெயலாளர். துபாயிலும் சுல்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிறுவனம் குறித்து இயக்குனர் கண்ணன் கூறுகையில், கடந்த 8 வருடங்களாக ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள பல ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் உள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தர வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வந்தோம்.

அந்த வகையில் தமிழக மாணவர்களுக்கு நாமே ஒரு கல்வி    மையத்தை தொடங்கி வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றுதான் கடந்த ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட போது கொரானா காலகட்டம் என்பதால் குறைந்த அளவில் மாணவர்கள் சேர்க்கை இருந்தது எனினும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி பயிற்சியோடு அவர்களுக்கு துபாயில் வேலை வாய்ப்புகளும் பெற்று தரப்பட்டது.

2022- 23 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கி உள்ளது. இதில் ஓராண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ இன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பாடப்பிரிவுகள் உள்ளன. பிடிக்கின்ற மாணவர்களுக்கு சிறப்பு கட்டண சலுகைவழங்கப்பட உள்ளது. பெற்றோர்கள் இருவரும் இல்லாத குழந்தைகளுக்கு 100% இலவச கல்வியும் ,அப்பா  அல்லாத பிள்ளைகளுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது.

போக்குவரத்து துறை, கட்டிட தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு 4000 சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது. இவர்கள் அனைவருமே நாம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்பவர்கள் தான் இவர்களுடைய வாழ்க்கை சூழலில் ஒரு சிறு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றே அவர்களது பிள்ளைகளுக்கு கல்வியில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. கட்டணத் தொகையை முழுமையாக செலுத்தாமல் 4 தவணைகளாக  ரூ.7000 ஆக செலுத்தும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு படிக்கும்போதே பகுதிநேர வேலை வாய்ப்புகளும் பெற்றுத் தரப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் 10 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு துபாயில் வேலை வாய்ப்பையும் பெற்றுத் தந்து அவர்கள் துபாய் செல்லும் விசா செலவை நிறுவனமே ஏற்றுக் கொள்கிறது. கல்வி நிறுவனத்தின் நோக்கமே மாணவர்கள் உடனடி வேலைவாய்ப்பை பெற்று அவர்கள் வாழ்வில் வளர்ச்சிபெற வேண்டும். அதே நேரம் அவர்களை ஒரு தொழில் முனைவோராக மாற்றுவதற்கான அனைத்து பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO