மின்சாரம் தாக்கி பள்ளி சிறுவன் உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கி பள்ளி சிறுவன் உயிரிழப்பு!

திருச்சி அதவத்தூர் பாளையம் பகுதியில் மின்சாரம் தாக்கி பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

திருச்சி அருகேயுள்ள அதவத்தூா் பாளையம் பகுதியைச் சேர்ந்தவா் சுதாகா் மகன் கிஷோா் (11). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அப்பகுதி உள்ள மாரியம்மன் கோயில் மோட்டாா் பம்பில் குளித்துவிட்டு மோட்டாரை நிறுத்தியபோது மின்சாரம் தாக்கியது. 

Advertisement

இதில் தூக்கி எறியப்பட்ட அவரை அருகிலிருந்தோர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தாா். தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீஸாா் சிறுவனின் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.