14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு இடங்களில் போராட்டம்!!

14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு இடங்களில் போராட்டம்!!

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் தொழிலாளர் விரோத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா பேரிடர் காலத்தில் திட்டமிட்டு மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்கள், பெருமுதலாளிகளுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்து அவற்றை நான்கு தொகுப்புகளாக மாற்றியதோடு, பொது துறை நிறுவனங்களை அனைத்தையும் தனியாருக்கு விற்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும் நமது நாட்டின் இயற்கை வளங்களை அந்நிய நாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் வகையில் சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

Advertisement

உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு மக்களின் வயிற்றில் அடிக்கிறது. தொழிலாளர் குரல் வளையை நெறிக்கும் விதமாக 8மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக மாற்றியமைத்திருக்கிறது. இது போன்ற தொழிலாளர் விரோதமான கொள்கைகளை கைவிடவேண்டும் எனவும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக இன்று ஜூலை 3தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் நடந்த ஆர்பாட்டத்தில் SDTU தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் முஸ்தபா அவர்கள் தலைமை வகித்தார். மேலும் சிறப்பு அழைப்பாளாராக SDPI கட்சி திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் இமாம் அவர்களும், மாவட்ட செயலாளர் ரபிக் அவர்களும் கலந்து கொண்டனர். SDTU தொழிற்சங்கம் மாவட்ட செயலாளர் மீரான், பொருளாலர் காஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். இதேபோல் மாவட்டத்தின் இராமச்சந்திரா நகர், ஜங்ஷன் மேம்பாலம், இப்ராஹிம் பார்க், TVS டோல்கேட், இரயில் நகர், கே.கே நகர், எடமலைப்பட்டி புதுர் என 20 இடங்களுக்கு மேல் சமூக இடைவெளியுடன் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது..