தமிழக பட்ஜெட் 2022: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டிற்கு ரூ. 911 கோடி நிதி ஒதுக்கீடு!டான்ஸ்டியா வரவேற்பு
தமிழ்நாட்டில் தொழில் பொருளாதார வளர்ச்சிகளை ஊக்குவிக்க இந்த பட்ஜெட்டில் பல நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை டான்ஸ்டியா வரவேற்கிறது. இது குறித்து டான்ஸ்டியா தலைவர் K.மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 911.0 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதையும், மூலதன மானியமாக ரூ.300 கோடியும், தமிழ்நாடு கடன் உத்தரயாத திட்டத்திற்காக ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பதையும் வரவேற்கிறோம்.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் Geo Textiles மற்றும் தென்னை நார் பயன்படுத்தி மதிப்பு கூட்டப்படும் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யவும், மாநிலம் முழுவதும் கயிறு தொழில் குடும்பங்களை மேம்படுத்தியும், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் ஒன்றை புதியதாக உருவாக்கி அதற்கு முதற்கட்டமாக ரூ.5 கோடி தொடக்க மூலதனமாக ஒதுக்கீடு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
குறு நிறுவன குழும மேம்பாட்டுக் திட்டம் ஒன்றை தமிழகத்தில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் திருநெல்வேலி, காஞ்சிபுரம், கடலூர், மதுரை மாவட்டம் உள்ளிட்ட 24 இடங்களில் குறு நிறுவன குழுமங்கள் நிறுமிட எடுக்கப்படும் முடிவை வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியை உருவாக்கி தொழிற் கூட்டமைப்பின் பங்களிப்புடன் திறன் சார்ந்த மையங்கள் பரிசோதனை மையங்கள், ஏற்றுமதி கிடங்குகள், உள்நாட்டு கொள்நலன் கிடங்குகள் போன்ற கட்டமைப்புகளை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை வரவேற்கிறோம். புதிதாக தோல் தொழில் மேம்பாட்டு கொள்கை ஒன்றை தமிழக அரசு அமைத்து மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஊரக பகுதியில் மகளிர் மூலம் புதிய காலனிகளை உற்பத்தி செய்ய ஏதுவாக இருக்கும்.
திறன் படைத்த மனித வளத்தை உருவாக்க 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை தொழிற் 4.0 தர நிலையை அடைவதற்கு தலை சிறந்த திறன் மையங்களாக மாற்றபடுவதற்கு ரூ.2875 கோடி முதலீட்டில் சிறப்பு திட்டத்தை வரவேற்கிறோம். புனைபெயர் தொழிலாளர்களுக்கான நடமாடும் தகவல் மையம் மற்றும் உதவி மையங்களை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அமைக்க தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைக்கு 2353,93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடுவரவேற்கிறோம்.
கோயம்புத்தூர், மதுரை, பெரம்பலூர், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்க ரூ. 50,000 கோடி முதலீடு ஈர்ப்பதற்கான திட்டம், 50 கோடி ரூபாய் தொடக்க நிதி ஒதுக்கீடு அளர்ந்து வரும் புதிய தொழில் நிறுவனங்கருக்கான திட்டம், மேலும் இதற்காக தமிழ்நாடு புதுதொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலமாக ஈரோடு, மதுரை, திருநெல்வேலி மண்டலங்களில் புதிய தொழில் மையங்களை ஏற்படுத்துவது மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில தொழில் மையம் அமைப்பது மேலும் தகவல் தொழில்நுட்ப துறைக்கு 199,60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு 54.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு தொழில் நுட்ப மையம் அமைப்பது போன்ற முடிவுகளை டான்ஸ்டியா வரவேற்கிறது.
அதே சமயத்தில் நிதி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற Pre Budget கூட்டத்தில் டான்ஸ்டியா சார்பில் சமர்ப்பிக்கட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. குறிப்பாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கு 6 சதவீத வட்டிமானியத்தை 31.03:2023 வரை நீடிப்பது மற்றும் Defence Coridor மூலம் சேலம், ஓசூர், திருச்சி, சென்னை போன்ற இடங்களில் இராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்வதற்காக புதிய தொழிற்பேட்டைகள் அமைப்பது, தமிழகத்தில் MSME துறையின் முதன்மை செயலாளர் அரசாணைப்படி புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கருக்கு 3 ஆண்டுக்குக்கு எந்தவித முன்அனுமதி தேவையில்லை என்ற திட்டத்தை அமுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது, சிட்கோ மற்றும் சிப்காட் தொழிற்பேட்டைகளில் குத்தகை அடிப்படையில் தொழிற்மனைகள் ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக, சுத்த கிரயப் பத்திரம் வழங்கும் முறையை அமுல்படுத்தாதது சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கான நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுமற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் கட்டாயமாக 25 சதவீத பொருட்களை சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய அரசு வழிவகை செய்யாமல் இருப்பது. நாள்தோறும் உயர்ந்து கொண்டிருக்கும் மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை காப்பாற்ற தமிழக அரசு எந்த அறிவிப்பும் செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை தருகிறது.
தமிழக பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளயிற்கு உயர்த்த உறுதியுடன் செயல்படும் நமது முதல்வர் நிதி அமைச்சர் மற்றும் தொழில் துறை அமைச்சர் மேலே குறிப்பிட்டுள்ள டான்ஸ்டியாவின் கோரிக்கைளை மறு பரிசீலனை செய்யமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO