கொரோனா 3வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள தமிழகமும், திருச்சியும் தயார் நிலையில் உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கொரோனா 3வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள தமிழகமும், திருச்சியும் தயார் நிலையில் உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா தொற்று இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மூச்சுத்திணறலால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கூடுதலாக கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்பொழுது தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. எனவே அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலை கொண்டு வருவதற்காக ஒடிசாவில் இருந்து சரக்கு ரயில் யார்டுல் 80 டன் ஆக்சிஜன் திருச்சி வந்தடைந்தது.

நான்கு உருளைகளில் வந்து உள்ள ஆக்ஸிஜனை லாரிகளில் உள்ள டேங்கரில் நிரப்பி வருகின்றனர். இந்த ஆக்சிஜன் திருச்சி ,கரூர், தஞ்சை உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கு தேவையான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை ஆய்வு செய்த  அமைச்சர் நேரு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது.... திருச்சி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மூன்றாவது அலை வரக் கூடாது. அவ்வாறு மூன்றாவது அலை  வந்தால் அதை எதிர்கொள்ள தமிழகமும், திருச்சியும் தயார் நிலையில் உள்ளது. தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் 350 கிலோ லிட்டர் தயாரிப்பதற்காகவும், BHEL, லால்குடி, துறையூர், மணப்பாறை ஆகிய பகுதிகளில் ஆக்சிஜசன் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஜூன் 12ஆம் தேதி திறக்கும் தண்ணீர் சில நாட்கள் கழித்து திருச்சியை வந்தடையும்.

மேலும் குறைந்த அளவே தண்ணீர் வந்து சேரும் இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி முழுவீச்சில் தூர்வாரும் பணி முடிவடையும் என்று அவர் கூறினார். இந்த பேட்டியின் போது திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, எம்எல்ஏக்கள் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC