மாணவியிடம் 2 வருடமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த வேன் டிரைவர் கைது

திருச்சி திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரசாக். இவரது மகன் முகமது அலி (37). இவர் பள்ளி வேன் டிரைவராக உள்ளான்.இந்நிலையில் பெல் வளாகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளை வேனில் அழைத்துச் செல்லும் போது அந்தப் பள்ளியில் படிக்கக்கூடிய 11-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளான்.
மேலும் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை கூறி மாணவியிடம் கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகமது அலி தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாத்தாளப்பேட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் நேற்று அவனை கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision