திருவெறும்பூர் துவாக்குடி மலை அரசு கலைக் கல்லூரி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அறிவியல் சார்ந்த விஷயங்களை சமுதாயத்திற்கு எடுத்துச் செல்ல தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ் பல்கலைக்கழக தொழில் மற்றும் நில அறிவியல் துறையுடன் துவாக்குடி மலையில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரி, திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் தன்னாட்சி கலைக்கல்லூரி, தஞ்சை ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இந்த கையெழுத்தில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு துணைவேந்தர் பொறுப்பு பாரத ஜோதி, பதிவாளர் கோ. பன்னீர்செல்வம், துறை தலைவர் நீலகண்டன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பங்கேற்ற கல்லூரி முதல்வர்கள் மற்றும் துறை தலைவர்கள் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தமானது நேற்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பொருந்தும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சிறப்பு சொற்பொழிவு, கருத்தரங்குகள், அறிவியல் சார்ந்த விரிவாக்க பணிகள், கட்டுரைப் போட்டிகள் ஓவியப் போட்டிகள் மாணவர்களின் அறிவுத்திறனையும் புரிதலையும்
மிகுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக ஆசிரியர்கள் தங்களது கல்வி, ஆய்வு திட்டம் மற்றும் ஆராய்ச்சி பணிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டும் தங்களின் திறன்களை மேம்படுத்தியும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் இந்த புரிந்துணர்வு உதவி செய்யும் விதமாக அமையும் என்று கல்லூரிகளின் நிர்வாக தரப்பில் தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision