இந்தியை திணிக்கும் பாஜக அரசை கண்டித்து மாணவர் இயக்கம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு மாணவரணி,தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தால் தான் அதற்கான நிதியை விடிவிப்போம் என மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வந்த நிலையில் அதனை எதிர்த்து தமிழக முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் மாணவரணி தமிழ்நாடு மாணவர் இயக்க மற்றும் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவர் அமைப்புகளின் சார்பில் மாணவரணி மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் முத்து வெங்கடேஷ் அசாருதீன் ஆகியோர் தலைமையில் தலைமையில்
இந்தியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஸ்ரீநிதி சதீஷ்குமார் பிரகாஷ் ஹரிஹரன் கண்ணன் சாமிக்கண்ணு மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன் கீதா செந்தாமரைகண்ணன் சந்திரசேகர் சிபிராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்...
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision