திருச்சி இரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது

திரு.ஜிஎம் ஈஸ்வர ராவ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் திரு. பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி RPF இன்ஸ்பெக்டர் திரு. K. P. செபாஸ்டியன் மற்றும் திருச்சி குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் திரு. M.ரமேஷ் அவர்கள் தலைமையில் இன்று 25.02.2025 திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர் திருச்சி நடைமேடைகளில் சட்டவிரோதமான போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேற்படி நடவடிக்கையின் போது 35 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆண் ஒருவரை சோதனை செய்த போது 2 கிலோ உலர் கஞ்சாவைக் கொண்ட ஒரு காக்கி கலர் மூட்டை இருப்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணையில், அவர் பெயர் மற்றும் விலாசம் அக்ஷ்யா மாஜி, த/பெ.மகேந்திரா மாஜி, தாதிபமன்பூர், பட்னமிஷ்ராபூர், நைகாநிதிஹி, மிஷ்ரபூர்பட்னா, பத்ரக், ஒடிசா-756130 என்பது தெரிய வந்தது. அவர் பத்ரக்கிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு ரயில் எண்.12663 ஹவுரா-டிபிஜே எக்ஸ்பிரஸ் மூலம் UTS டிக்கெட் எண்.AYA 65906780 Ex இல் பயணம் செய்தது தெரியவந்தது.
பின்னர் மேற்கூறிய குற்றம் சாட்டப்பட்ட நபருடன் கைப்பற்றப்பட்ட 2.0 கிலோ (தோராயமாக) கஞ்சா மற்றும் ஒரு Itel A05s மொபைல் ஆகியவை தேவையான சட்ட நடவடிக்கைக்காகவும், அகற்றுவதற்காகவும் திரு.கே.விஸ்வநாதன் SSI/NIB/CID/Tirchyயிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision