தக்காளி விலை  கிலோ 100 ரூபாயை தொடுமாம் - அதிர்ச்சி தகவல்

தக்காளி விலை  கிலோ 100 ரூபாயை தொடுமாம் - அதிர்ச்சி தகவல்
திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு மகாராஷ்டிரா, ஆந்திராவிலிருந்து தக்காளி வரும். மகராஷ்டிராவில் மழை அதிகமாக இருப்பதால் ஆந்திராவில் இருந்து வருகிறது. நாளொன்றுக்கு 25 லாரிகளில் 300 டன் தக்காளி வரும் நிலையில் ஒரு கிலோ 55 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதிகமான தக்காளிகள் அழுகியும், உடைந்தும் வருகிறது .அவை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பங்களாதேஷ் நாட்டில் உள்ளவர்கள் மகாராஷ்டிரா ஆந்திராவில் இருந்து தக்காளியை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

கடந்த 9 மாதங்களாக தக்காளி விலை கிலோ 5 ரூபாயை தாண்டவில்லை. விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் இருந்த நிலையில் விலை அதிகமாக கொடுத்து வாங்கும் பங்களாதேஷ் வியாபாரிகளால் தற்போது இந்த விலை உயர்வு என திருச்சி காந்தி மார்க்கெட் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் கந்தன்  தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷ் வியாபாரிகள் ஏற்கனவே வட மாநிலங்களில் தக்காளிகளை வாங்கி வந்தனர். அங்கே விளைச்சல் இல்லாததால் தற்பொழுது தென் மாநிலங்களுக்கு வந்துள்ளனர்.

100 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை ஆகலாம் என அதிர்ச்சி தகவலையும் குறிப்பிட்டார். காரணம் தக்காளியின் விளைச்சல் குறைவாக உள்ளது. அதிகமான விவசாயிகள் தக்காளி செடிகளை அழித்துவிட்டனர். தமிழகத்தில் தர்மபுரி பகுதியில் இருந்து மட்டும் குறைந்தளவு தக்காளி  வருகிறது  என்றார்.

திருச்சி பால்பண்ணை அருகே உள்ள வெங்காயம் மண்டியில் நாளொன்றுக்கு பெரிய வெங்காயம்  200 டன் கர்நாடகா, மகாராஷ்டிராவிலிருந்து வருகிறது.400 டன் தேவையாக உள்ளது. கிலோ இருபது ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தீபாவளி நேரத்தில்  இன்னும் பத்து ரூபாய் வரை உயரும் என வெங்காய மண்டி செயலாளர் தங்கராஜ்  தெரிவித்துள்ளார். கர்நாடக மகாராஷ்டிராவில் மழை காரணமாக இந்த விலை  உயர்வுக்கு காரணம் என தெரிவித்தார்.

சின்ன வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாளொன்றுக்கு 250 டன் பெரம்பலூர், துறையூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளிலிருந்து வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn