ஆனந்த குளியலில் திருச்சி “ஆண்டாள்” யானை:

ஆனந்த குளியலில் திருச்சி “ஆண்டாள்” யானை:

108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் உள்ள ரங்கநாதர் மற்றும் தாயார் சன்னதியில் தினசரி நடைபெறும் பூஜைகள் ஆகியவற்றில் இடம் பெறுவதற்காக ஆண்டாள் என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை ஓய்வெடுப்பதற்காக கோவில் வாளகத்திலேயே தனியாக கொட்டகை உள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பிறந்த இந்த யானை பிரியா என்ற பெயரில் 8 வயதில் திருச்சி கொண்டு வரப்பட்டது.

தற்பொழுது ஆண்டாள் என்ற பெயர் கொண்ட இந்த யானைக்கு 41 வயது ஆகிறது. காவிரி மற்றும் கொள்ளிடத்தில் மட்டும் யானை குளிக்க வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் யானை ஆண்டாள் குளிப்பதற்காக ஶ்ரீரங்கம் உள்ஆண்டாள் சன்னதி அருகில் நன்கொடையாளர் உதவியுடன் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான மழைத்தூறல் போன்று தூவும் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. மிகுந்த உற்சாகத்துடன் மழையில் நனைவது போன்ற உற்சாகத்துடன் குளியலிட்டு மகிழ்வதாக யானை வளர்ப்பாளர் தெரிவிக்கிறார்.

மேலும், குளிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ஷவருக்காக தண்ணீர் பெறுவதற்காக 96 அடி ஆழத்துக்கு புதிதாக ஆழ்துளைக் கிணறு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் கடுமையாக இருக்கும் நிலையில், யானை அடிக்கடி குளிப்பாட்டுமாறு மாவட்ட வன அலுவலரும், கால்நடை மருத்துவர்கள் அறித்த அறிவுரையை ஏற்று இந்த ஏற்பாடு செய்யப்பட்