திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாநகர காவல் ஆளிநர்களின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாநகரத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், தலைக்கவசம் (Helmet) அணிவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று (01.02.2025)-ந் தேதி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து இருந்து இருசக்கர வாகன பேரணியை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

மேற்கண்ட விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியானது MGR சிலை அருகில் தொடங்கி, உக்கிரகாளியம்மன் கோயில், KT சந்திப்பு, கலைஞர் அறிவாலயம், அண்ணாசிலை, பெரியசாமி டவர், சத்திரம்பேருந்து நிலையம், மெயின்கார்டு கேட், மரக்கடை, பாலக்கரை, தலைமை தபால்நிலையம், TVS டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பேரணி நிறைவு பெற்றது.

மேற்கண்ட விழிப்புணர்வு பேரணியில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் ஆளிநர்கள் என மொத்தம் 460 இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து சாலை பாதுகாப்பு குறித்து வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டார்கள். மேலும் பேரணியில் காவல் துணை ஆணையர் தெற்கு, காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 500 பேர் கலந்து கொண்டார்கள்.

மேலும் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பாக தெருமுனை நாடகங்கள் பொது மக்கள் கூடுமிடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளி கல்லூரி மாணவமாணவியருக்கு அவர்களது பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்ட வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision