டெங்கு கொசுவை ஒழிக்க திருச்சி மாநகராட்சி புதிய முயற்சி - வரவேற்பை பெற்ற உயிரியல் திட்டம்!!
கொரோனா நோய்த்தொற்று மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்து உள்ள நிலையில், தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் மழைநீர் உள்ளிட்ட நன்னீரில் உற்பத்தியாகும் டெங்கு கொசுக்களின் மூலம், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தீவிர களப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கென குடியிருப்பு பகுதிகளில் மக்கள் சேமித்து வைக்கும் நன்னீரில் 'அபீட்' எனப்படும் வேதிப்பொருளை திரவ நிலையில் குறிப்பிட்ட விகிதத்தில் கலப்பதன் மூலம் டெங்கு கொசு லார்வா உற்பத்தியை கட்டுப்படுத்த முடியும்.
Advertisement
ஆனால் இந்த முறை தண்ணீருக்காக மக்கள் பயன்படுத்தும் கிணறுகளிலும், பொது இடங்களில் உள்ள கிணறுகளிளும் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. எனவே இதுபோன்று வீட்டு உபயோகம் மற்றும் பொது இடங்களில் உள்ள பயன்படுத்தக்கூடிய, பயன்படாத கிணறுகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கம்பூசியா எனும் மீன் வகைகளை கிணற்றுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் (5 பெண்,4 ஆண் மீன்) விடும் பணியினை தொடங்கியுள்ளது.
கம்பூசியா எனப்படும் கொசு மீன்கள் ஒரு நன்னீர் மீன் இனமாகும். இந்தக் கொசுமீன்கள் பிற நன்னீர் மீன்களுடன் ஒப்பிடுகையில் சிறியவை ஆகும், பெண் மீன்கள் 7 cm (2.8 in) வரையும், ஆண் மீன்கள் 4 cm (1.6 in) வரையும் இருக்கும். இந்த மீன்களின் முதன்மை உணவு கொசுக் குடம்பிகள் ஆகும்.இவை கொசுக்களின் குடம்பிகளை கொண்டு விடுவதால் கொசுக்கள் வளர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும்.
கம்பூசியா வகை மீன்கள் ஒரு மாதத்திலேயே 25 முதல் 30 மீன்குஞ்சுகளை இடும்.ஒரு கம்பூசியா மஎன்று டாக்டர் கேத்ரின்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவின் பேரில்
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட "ஹாட்ஸ்பாட்" என்று கண்டறியப்பட்ட அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட 23,27 வது வார்டுகளில் கிணறுகளிலிருந்து டெங்கு கொசு லார்வாக்கள் கண்டறியப்பட்டது. எனவே அப்பகுதிகளில் உள்ள 170 க்கும் மேற்பட்ட பயன்பாட்டில் உள்ள கிணறுகள், 50க்கும் மேற்பட்ட பயன்பாட்டில் இல்லாத கிணறுகளில் கம்பூசியா மீன்களை விடும் பணியினை 50 மாநகராட்சி ஊழியர்களை கொண்டு மேற்கொண்டு வருவதாகவும், மக்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள கிணறுகளுக்கு கம்பூசியா வகை மீன்களை திருச்சி மணல்வாரி துறை மற்றும் ஜி கார்னரில் உள்ள நுண் உரமாக்கும் மையங்களில் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் திருச்சி அரியமங்கலம் கோட்டம் துப்புரவு அலுவலர் கார்த்திகேயன்.
கொரோனா நோய் தொற்றினால் ஏற்கனவே மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் மேலும் சிரமமாகும், இதை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் கம்பூசியா மீன்களை வழங்குவது பாராட்டுக்குரிய ஒன்று என்றும் மக்களுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழிமுறை என்றும் தெரிவிக்கின்றார் அப்பகுதி குடியிருப்புவாசி ரத்னா.
டெங்கு இல்லாத மாவட்டமாக திருச்சி மாவட்டம் உருவெடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
டெங்கு கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நன்னீர் நிலைகளில் டெங்கு கொசு லார்வாக்கள் உற்பத்தியாவதை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ள இத்தகைய முயற்சி வரவேற்கதக்க ஒன்று.