திருச்சியில் பாதாள பள்ளங்களில் சிக்கிய இரண்டு பேருந்துகள் -வாகனங்கள்  

திருச்சியில் பாதாள பள்ளங்களில் சிக்கிய இரண்டு பேருந்துகள் -வாகனங்கள்  

திருச்சி தெப்பக்குளம் முதல் மரக்கடை வரையிலான மேலரண் சாலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி, குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஓரளவு பணிகள் நிறைவு பெற்ற இடத்தில் இன்னும் சாலைகள் போடப்படாமல் மண் சாலைகளாகவே உள்ளது.

திருச்சி மாநகரில் இன்று மாலை முதல் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்,திருச்சி மேலரண் சாலையில் மரக்கடை பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு அரசு பேருந்துகள் சாலையில் தோண்டப்பட்டு தற்காலிகமாக மண் கொண்டு மூடப்பட்டிருந்த பகுதியில்  அப்படியே பேருந்தின் சக்கரங்கள் மண்ணில் புதைந்தது. சகதியில் சிக்கிய பேருந்துகளை மீட்க முடியாமல் ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

சுமார் 2 மணி நேரம் பெய்த கன மழையால்  தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகள் தெரியாத அளவுக்கு மழை நீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். குறிப்பாக திருச்சி உறையூர் ,தில்லை நகர் ,மரக்கடை, அரசு மருத்துவமனை பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலைகளில் பள்ளங்கள் வெட்டப்பட்டு மூடப்படாமல் இருந்ததால்  பள்ளங்களில் மழை நீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பிரதான சாலை என்பதால் வெகுவாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இணைந்து பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டு பிறகு முறையாக மூடப்பட்டு சாலைகள் செப்பனிடப்படாததன் காரணமாக இது போன்ற வாகனங்கள் சிக்கும் அபாயம் உள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீர் செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO