திருச்சி அருகே வளர்ச்சி திட்டம் குறித்து ஊர்க்கூட்டம்!!

திருச்சி அருகே வளர்ச்சி திட்டம் குறித்து ஊர்க்கூட்டம்!!

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் மணிகண்டம் ஒன்றியம் அரியாவூர் ஊராட்சியில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டம் தயாரித்து கிராம முதலீட்டு திட்டம் ஒப்புதல் பெறுதலுக்கான ஊர்க்கூட்டம் நடைப்பெற்றது. 

Advertisement

ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் வழிகாட்டுதலின் படியும் செயல் அலுவலர் திருமுருகன் ஆலோசனையின் படியும் வட்டார அணித்தலைவர் சம்பத் குமார் திட்ட விளக்கவுரை ஆற்றினார். 

Advertisement

ஊர்க்கூட்டம் நடைப்பெற்றது. ஊராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் தொழில் முனைவுகளை உருவாக்குதல், தொழில் குழுக்களை உருவாக்குதல், உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்குவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கிராம கூட்டத்தில் ஒப்புதல் நடைபெற்றது.