வார்டில் நீட் தேர்வு ரத்து பிக் பாஸ் கேமரா 1லட்சம் 2 சவரன் தங்கம் இரண்டு சக்கர வாகனம் வாக்குறுதிகளை அள்ளி வீசிய வேட்பாளர்
திருச்சி மாவட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஜஹாங்கீர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களும் விதவிதமான நூதனமான தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிலர் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் கொடுத்துள்ள வாக்குறுதிகள் நகைப்புக்குரியதாகவும் வாக்குறுதிகள் பிரமாண்டத்தின் உச்சத்தில் உள்ளது. தேமுதிக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கொடுத்த வாக்குறுதிகளை பாருங்கள்.
6 வது வார்டில் உள்ள மாணவர்களுக்கு NEET தேர்வு ரத்து செய்யப்படும்.
6 வது வார்டில் உள்ள அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்.
6 வது வார்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் 5 வருடம் இலவச மருத்துவம்.
வார்டில் உள்ள வேலையில்லா பட்டதரிகளுக்கு சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு அமைத்து தரப்படும்.
வார்டில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். வார்டில் தெருக்களில் அனைத்து மூலைகளிலும் அதிநவீன
Bigg Boss கேமராக்கள் பொருத்தப்படும் என பிரமாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
6 வது வார்டில் உள்ள முதியோர் உதவிதொகை – 1000 தில் இருந்து
5000 ஆக உயர்த்தபடும்.
6 வது வார்டில் உள்ள திருமணமாகாத பெண்களுக்கு ரூபாய் 1 லட்சம் ரொக்கம் இரண்டு சவரன் தங்கம் வழங்கப்படும்.6 வது வார்டில் உள்ள படித்த பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும்.
வார்டில் உள்ள முதியோர்களுக்கு இலவச மருத்துவத்திற்கு செல்வதற்கான ஆட்டோ இலவசமாக தரப்படும். வார்டில் வாரம் ஒரு முறை குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும்.
எங்கெல்லாம் அடக்கப்படுபவர்களின் குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் என்று சேகுவேரா படத்துடன் தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசி நகைப்புடன் செய்யவே முடியாத திட்டங்களையும் வாக்குறுதிகளாக வாக்காளர்களை கவர முயற்சி எடுத்துள்ளார்.